உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 50 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், இவர்களிடமும் டெங்கு அறிகுறி இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரசோபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பத்து பகுதிகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு 36 முகாம்கள் அமைக்கப்பட்டு 3,719 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கனமழை காரணமாக தற்போது டெங்கு மிக அதிக அளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் குழந்தைகள் அதிகம் இருந்ததால் விமர்சனங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…