ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது-ப.சிதம்பரம்

Default Image

மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தற்போதைய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி  அளிக்கிறது. நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறாதது ஏன்? என்று  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார் . 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அரசால் கணிக்க முடியவில்லை.

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை .2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.அரசில் ஸ்திரத்தன்மை அற்ற சூழல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால் ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்