சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தியாவில் கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனம், கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரெம்டெசிவிரை தயாரிக்க 6 மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அதில் 5 நிறுவனங்கள், கிலீட் சைன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த மருந்து, ஊசி மூலம் செலுத்தப்படும். கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த மருந்தினை கொடுக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்திய நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் வென்டிலேட்டர் இல்லாமல் சாதாரண ஆக்ஸிஜன் பெற்று வருபர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான டெல்லி, மும்பை, பெங்களூரில் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையிலும் கடந்த மூன்று நாட்களாக இந்த மருந்திற்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையிலும் கடந்த மூன்று நாட்களாக இந்த மருந்து பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள பைகுல்லா பார்மசியில் ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் மருந்துகள், ஜூலை 5 ஆம் தேதி தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டி.ஜி.சி.ஐ), ஜூன் 1 ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் நிறுவனமான கிலியட் சைன்ஸிடம் மருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது. அதுமட்டுமின்றி, மூன்று இந்திய உற்பத்தியாளர்ககளான ஹெட்டெரோ, சிப்லா மற்றும் மைலன் நிறுவனங்களுக்கு இந்த மருந்தை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் சிப்லா நிறுவனம் அறிமுகம் செய்யப்போவதாக கூறியது. அதற்கு சிப்ரெமி (Cipremi) என பேரிட்டதாகவும், 100 மில்லி அளவிலான அந்த மருந்தை ரூ.4,000க்கு விற்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…