டெல்டா வகை கொரோனா வைரஸ் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் – ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்!

Default Image

டெல்டா வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களையும் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

தற்பொழுது இந்த டெல்டா வகை உலகெங்கும் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள நாடு முழுவதிலும் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இரண்டு தவணை தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு கூட கொரோனா தொற்று சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது. அதுவும் டெல்டா வகை கொரோனா முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் பாதிக்கும் எனவும் தற்போது ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஒரு ஆய்வில், டெல்டா வகை கொரோனா, தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த டெல்டா வகை கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களை பாதிக்கும் பொழுது உயிரிழப்பு ஏற்படாது என கூறப்படுகிறது. இந்த ஆய்வில் ஈடுபட்ட தேசிய தொற்றுநோயியல்  நிறுவனத்தின் விஞ்ஞானி ஜெரோமி தங்கராஜ் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விட தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை இந்த டெல்டா வகை கொரோனா பாதிக்கும் பொழுது உயிரிழப்பு மிக குறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்