நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு..!
மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டெல்டா வகை கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு மக்களை பெரிதளவு பாதித்து வந்தது.
தற்போது அங்கு நாளுக்கு கொரோனா தொற்று ஐந்தாயிரம் பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாசிக் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் கிஷோர் ஸ்ரீனிவாஸ் தெரிவிக்கையில், 30 பேருக்கு இங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதில் 28 பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் கங்காபூர், சாதிக் நகரத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த டெல்டா வகை கொரோனா வேகமாக பரவும் என்பதால் மக்கள் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.