ஏற்றுமதி நிறுவங்களின் உரிமங்களை திருடும் பலே திருட்டு கும்பல்.! டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை.!

Default Image

போலி தரவுகளை கொண்டு 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஏமாற்றி சுமார் 3.5 கோடி  மதிப்பிலான உரிமங்கள் பறிபோக காரணமாக இருந்த கும்பலை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆடை நான்கு வெவ்வேறு ஏற்றுமதி கம்பெனிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. அந்த புகாரின்படி, ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமங்களை திருடி, வேறு விதமான மோசடி செய்யபடுகிறது என புகாரளிக்கப்பட்டது. இந்த போலி தரவுகளை கொண்டு 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஏமாற்றி சுமார் 3.5 கோடி  மதிப்பிலான உரிமங்கள் பறிபோயுள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட டெல்லி சைபர் கிரைம் போலீசார் இதுவரை மொத்தம் 7 பேரை கைதுசெய்துள்ளனர். இந்த மோசடி கும்பலில் முக்கியமானவனாக செயல்பட்ட புனேவை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேசத்தில் உள்ள பலகாட் பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் டெல்லி பகுதியில் வசித்துவந்துள்ளனர்.

இந்த கும்பலின் தொடர்பு, இந்தியா முழுவதும் பல முக்கிய வங்கி முகவர்களுடன் இருந்துள்ளது எனவும், இதுவரை 107 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கும்பலானது, முக்கிய தரவுகளை பெற போலி ஆவணங்களையும், வீடியோ கான்பிரன்சிங்கின் போது அந்தந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் போலவும் ஆள்மாறாட்ட வேலைகளில் ஈடுபட்டு நிறுவனங்கள் பற்றிய முக்கிய தரவுகளை பெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்