கொரோனா ஊரடங்கில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி – ஸ்விக்கி நிறுவனம்
கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி .
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வீடுகளில் இருந்த மக்களில், பெரும்பாலானோர் இணையத்தில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர்.
இந்நிலையில், இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கி, கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி செயப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், 1.29 லட்சம் சாக்கோ லாவா கேக், 1.20 லட்சம் பிறந்தநாள் கேக், 3.50 லட்சம் நூடில்ஸ் பொட்டலங்கள், 32.3 கோடி கிலோ அளவுள்ள வெங்காயம், 5.6 கோடி கிலோ அளவில் வாழைப்பழம் உள்பட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.