காத்தாடி கயிறு பைக் டயரில் சிக்கி சோமாட்டோ ஊழியர் மரணம்.!
இருசக்கர வாகனத்தில் காத்தாடி கயிறு சிக்கி டெல்லியை சேர்ந்த சோமட்டோ ஊழியர் உயிரிழந்துவிட்டார்.
பெரும்பாலான உணவு நிறுவனங்கள் தங்கள் உணவு பொருட்களை உணவு டெலிவெரி செய்யும் ஆன்லைன் ஆப் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகின்றன.
சில சமயம், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் உணவு டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். அப்போது சில சமயம், விபத்துகளும் ஏற்பட்டுள்ளதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருக்கிறோம்.
அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஆனால் இவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை கொண்டு செல்ல வேண்டிய கட்டயாம் இருந்தததாக தெரியவில்லை. இவர் செல்லும் வழியில் காத்தாடி கயிறு இவரது இருசக்கர வாகனத்தில் சிக்கி, அதன் மூலம் விபத்து ஏற்பட்டு இவர் உயிரிழந்துவிட்டார்.
சோமாட்டோ எனும் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில், டெல்லியில் உள்ள துக்ளகாபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
32 வயதான அவரது பைக்கின் டயரில் காத்தாடி கயிறு சிக்கியதால், விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.