தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனு ! நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

Published by
Venu

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் குற்றவாளிகள் புதிய மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது மனுவை ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.பின்னர்  வினய் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையெடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் திகார் சிறையில் இருக்கும் வினய் ஷர்மா கடந்த 16-ம் தேதி சுவரில் தனது தலையை மோதி கொண்டு காயத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர் அவரை மீட்டு சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.இதற்கு இடையில்  குற்றவாளி  வினய் சர்மா சார்பில்  உயர்சிகிச்சைக்கு உத்தரவிடக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

 

 

 

Published by
Venu

Recent Posts

இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றார்!

கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…

36 seconds ago
பிற்பகல் 1 மணி வரை இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிற்பகல் 1 மணி வரை இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…

24 mins ago

வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது – மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…

40 mins ago

வார தொடக்க நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…

1 hour ago

பயணிகள் கவனத்திற்கு! பேருந்து முன்பதிவு செய்யும் நடைமுறை மாற்றம்!

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…

2 hours ago

ராயன் வசூலை நெருங்கும் கங்குவா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…

2 hours ago