டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதியாக உருவெடுத்துள்ளது – அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Default Image

டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி தலைமை செயலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கோடியை ஏற்றிப்பின் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது மக்களுக்கு சேவை செய்யும் போது உயிர் இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பள்ளிகள் செப்டம்பர் 27 முதல் ‘தேஷ்பக்தி’ பாடத்திட்டம் கற்பிக்கத் தொடங்கப்படும் என அறிவித்தார். இது ஒரு செயல்பாட்டு அடிப்படையிலான பாடநெறியாகும். இதில் பள்ளி குழந்தைகள், நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பது, அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் தேசத்திற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கற்பிக்கப்படும் என்று கூறினார்.

நாங்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தோம், ஆனால் அவர்களுக்கு தேஷ்பக்தி கற்பிக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தேசபக்தியின் சாரத்தை கற்றுக்கொள்வார்கள். அரசின் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை பட்டியலிட்டு, டெல்லி நிர்வாகம் ஒரு முன்மாதியாக உருவெடுத்துள்ளது என குறிப்பிட்டார்.

அதன் முயற்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார். அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நகரம் முழுவதும் உள்ள பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் யோகா வகுப்புகளை அரசாங்கம் தொடங்கும் என்றார். ஏதேனும் குடியிருப்பு காலனியில் 40-50 பேர் முன் வந்தால், டெல்லி அரசு அவர்களுக்கு யோகா பயிற்சிகளை வழங்கும்.

ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர், அடுத்த முறை 70 பதக்கங்களை வெல்ல நாடு தயாராக வேண்டும் என்றார். டெல்லி அரசின் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சேர விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2047 க்குப் பிறகு டெல்லியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்