மழைக்கு பிறகு சற்று உயர்ந்த டெல்லி காற்றின் தரம்.. ஆனாலும், மோசமான அளவு தான்.!

Delhi air pollution

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைய எட்டி வருகிறது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கே சிரமப்படும் அளவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த காற்று மாசுவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிர வாகன கட்டுப்பாடு, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை, தண்ணீர் லாரி மூலம் நீர் பீய்ச்சி அடிப்பது, செயற்கை மழை பொழிவு என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்

இந்நிலையில், டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலை என்ற நிலையில் இருந்து மோசமான நிலைக்கு முன்னேறியுள்ளது. மழைக்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய காற்றின் தர அளவீட்டில் 407 ஆக இருந்த காற்று மாசு அளவு, தற்போது 361ஆக குறைந்துள்ளளது.

டெல்லியில் , நேற்று காலை 10 மணியளவில், மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் காற்றின் தரம் 407 ஆக இருந்தது. ஷாதிபூரில், 405 ஆக இருந்தது. சோனியா விஹார் 399, அசோக் விஹார் 390, பவானா 389, வசீர்பூர் 385, ITO மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய இரண்டும் 381 என காற்று மாசு பதிவாகி இருந்தது.

தற்போது, காற்று மாசு அளவானது, டெல்லியில் ஆனந்த் விஹார் 295, ஆர்.கே.புரம் 230, பஞ்சாபி பாக் 244, மற்றும் ITO 263 என பதிவாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died
TNGovt - mathiazhagan mla