டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் தொண்டர்கள் கொண்டாட்டம்.
டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி.
அதாவது, டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியில் ஆதிக்கத்தை செலுத்தி வந்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
134 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று அதிகாரத்தை பிடித்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். ஆம் ஆத்மி அலுவலகம் முன் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள், கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாராட்டி, நடனமாடி, கோஷம் எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…