#DelhiMCDPolls: டெல்லியில் பாஜக 32, ஆம் ஆத்மி 31 இடங்களில் வெற்றி!
டெல்லியில் தேர்தலில் 101 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 74 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.
டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்த டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் இதுவரை 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதுபோல் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி 31 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் 101 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 74 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், காங்கிரஸ் 4-ல் வெற்றி, 6-ல் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று, 1-ல் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.