70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 46 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் 21,650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோன்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் 3,391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெருபான்மையை நிரூபித்து 3-வது முறையாக ஆட்சி அமைகிறது. மேலும் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…