டெல்லியில் கடந்த சனிக்கிழமை 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று புதிய உச்சத்தை நெருங்குகிறது. பாஜக 07 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டெல்லி முதல்வர் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளதால் டெல்லி மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டார். மேலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிற மாநிலத்தின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இதனிடையே டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 70 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டப் பேரவையில் 67 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது ஆம் ஆத்மி. அப்போது பாஜகவுக்கு 3 இடங்களே கிடைத்தன என குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…