#DelhiElectionResults : முன்னிலை வகிக்கிறது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.!

Default Image
  • டெல்லியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி ஆம்ஆத்மி, காங்கிர்ஸ், பாஜக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் போட்டியிட்டனர். இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை வெளியான தேர்தலின் கருத்துக்கணிப்பில் படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருதப்பட்டது. இந்நிலையில், 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில், ஆம்ஆத்மி கட்சி தற்போதையை நிலவரப்படி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் கூட முன்னிலை பெறவில்லை. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுமார் 1.47 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தினர். மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பாஜக 67 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதனிடையே 70 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 67 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது ஆம்ஆத்மி கட்சி அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானார். அப்போது பாஜகவுக்கு 3 இடங்களே கிடைத்தன என குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்