70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் 1500 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவு சந்தித்துள்ளார். பின்னர் இந்த வாக்கு எண்ணிக்கையில் பெருபாலும் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருவதால் மீண்டும் அரியணையில் அரவிந்த் கேஜ்ரிவால் அமருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆம் ஆத்மி முன்னிலை வகிப்பதால் கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள அலுவலத்தில் முன்பு ஆடல், பாடலுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…