#DelhiElectionResults : 50 இடங்களுக்கு மேல் ஆம் ஆத்மி அமோக முன்னிலை
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி,
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – முன்னிலை நிலவரம் 70/70
ஆம் ஆத்மி – 52
பாஜக – 18
காங்கிரஸ் – 0
மற்றவை – 0