டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் உமார் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட உமார் காலித் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது:
காலித்தின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் உத்தரவு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. உமர் காலித்தின் ஜாமீன் மீதான தீர்ப்பை மூன்றாவது முறையாக கர்கார்டூமா நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. முன்னதாக மார்ச் 14 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளிலும் ஜாமீன் மனு மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் போராட்டம்:
பிப்ரவரி 2020 கலவரத்தின் மூளையாக இருந்ததற்காக உமர் காலித் மற்றும் பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இந்த கலவரங்கள் ஏற்பட்டது.
எஃப்.ஐ.ஆரில் காலித் போராட்ட இடங்களில் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைச் செய்ததாகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது டெல்லி மக்களை வீதிக்கு வருமாறும் வேண்டுகோள் விடுத்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…