டெல்லி வன்முறை: உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு…!

Default Image

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர்  உமார் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட உமார் காலித் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது:

காலித்தின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் உத்தரவு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. உமர் காலித்தின் ஜாமீன் மீதான தீர்ப்பை மூன்றாவது முறையாக கர்கார்டூமா நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. முன்னதாக மார்ச் 14 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளிலும் ஜாமீன் மனு மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டம் போராட்டம்:

பிப்ரவரி 2020 கலவரத்தின் மூளையாக இருந்ததற்காக உமர் காலித் மற்றும் பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இந்த கலவரங்கள் ஏற்பட்டது.

எஃப்.ஐ.ஆரில் காலித் போராட்ட இடங்களில் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைச் செய்ததாகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது டெல்லி மக்களை வீதிக்கு வருமாறும் வேண்டுகோள் விடுத்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்