டெல்லி விவகாரம் – நாளை உச்சநீதிமன்றம் விசாரணை
- நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
- டெல்லியில் போராட்டத்தில் போலீசார் தடியடி குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல இடங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்தவகையில் நேற்று டெல்லியிலும் போராட்டம் நடைபெற்றது.ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலை கழக போராட்டம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங் என்பவர் முறையீடு செய்துள்ளார்.மேலும் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.மேலும் டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது .வன்முறை தொடர்ந்தால் வழக்கை விசாரிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.