வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மத்தியில் பல வன்முறைகள் வெடித்தது.
இந்த வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் தனது கடைசி வீடியோவில் தீப் சிந்துவை ஆதரிக்குமாறு வலியுறுத்தினார். இதனை எதிர்த்து டெல்லி காவல்துறை விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறையில் சதிகாரர் என்று கூறப்படும் லக்கா சித்தானா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது.
லக்கா சித்தனா குறித்து காவல் துறையினர் கூறுகையில், டெலிகிராம் மற்றும் சிக்னல் பயன்பாடுகளில் வீடியோக்களை தனது ஆதரவாளர்களுக்கு அனுப்புகிறார் என்றும், பின் அதை தனது முகநூல் கணக்கிலும் பதிவேற்றுகிறார் என்று தெரிவித்துள்ளனர். இவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…