மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
இந்த 2 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், பஜன்புரா போன்ற பகுதிகள் கலவர பூமியாக மாறியது.
இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தால் நேற்று 13 பேர் உயிரிழந்தனர்.அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை வடகிழக்கு டெல்லியில் வன்முறை செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த இரண்டு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் குருதேக் பகாதூர் மருத்துவமனை நிர்வாகம் மேலும் 5 பேர் உயிரிழந்தாக கூறியதால் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக உயர்ந்துள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…