டெல்லி வன்முறை : காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரிடம் மனு

Default Image

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில்  2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந்தேதி டெல்லி வடகிழக்கு பகுதியில் போராட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர். அப்போது போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தனர்.மேலும் சாலைகளில் இருந்த வாகனங்கள் , டயர்களை எரித்தனர்.

வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வன்முறையில்   பலி எண்ணிக்கை 30 ஆக இருந்த நிலையில் இன்று 34 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வன்முறை பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் டெல்லி வன்முறை தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை குடியரசு தலைவரிடம் அளிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna
Kalaignar Centenary Hospital
amazon netflix
Hobart Hurricanes Women vs Adelaide Strikers Women