டெல்லி வன்முறை: காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம்-பிரகாஷ் ஜவடேகர்
இன்று டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்மோகன் சிங் மற்றும் பல மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சிஏஏ எதிராக போராட்டங்களை தூண்டும் வகையில் ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி நடந்து கொள்கிறார்கள். மேலும் கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தாகீர் உசேன் வீடு கலகத் தொழிற்சாலை என்பதைக் காட்டும் வீடியோ உள்ளது. வன்முறைக்குத் தயாராவதற்காக அவரது வீட்டில் துப்பாக்கிகள், மற்றும் பிற பொருட்களைப் பார்த்தோம்.
மேலும் நாங்கள் விசாரணையை ஆரம்பித்து தான் தற்போது டெல்லியில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இத்தகைய அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம்.கொலிஜியம் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டது என கூறினார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இரண்டு மாதத்திற்கு மேலாக போராட்டங்கள் நடைபெறுகிறது.சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கிது.இந்த போராட்டத்திற்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.
இதனால் இருவரும் இடையில் மோதல்ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர்மீது கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தனர். வன்முறை பாதித்த பகுதிகளில் “144”தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.