டெல்லி வன்முறை வழக்கு : ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

Default Image
  • டெல்லி வன்முறை வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்து, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக  இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் மீட்கப்பட்டதால், சந்தேகம் வலித்தது. பின்னர் தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது போலவும், அதில் அவர் நிற்பதுபோன்ற காட்சிகளும் இடம்பெற்றன. இதனையடுத்து, தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தாகிர் உசைன் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணை முடிந்து அதிலிருந்து அவர் விடுதலையாகும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்