டெல்லி வன்முறை : 1820 பேர் கைது, 53 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை.!

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது எதிர்ப்பாளர்களுக்கு, ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக வெடித்தது இதனால் அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்பொழுது, இதுவரை ஆயுத சட்டத்தின் கீழ் 47 வழக்குகள் உள்பட 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1,820 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025