டெல்லி வன்முறை:இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவுகள் மற்றும் 630 பேர் கைது – டெல்லி போலீசார் ..!
- டெல்லி வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டெல்லி போலீசார் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், கடந்த 23-ந்தேதி வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் போராட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி கொண்டு தாக்கிக்கொண்டனர்.இதில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட பல இறந்தனர். இதையடுத்து வன்முறை பாதித்த பகுதிகளில் “144”தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லி வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று துணைநிலை ஆளுநர் அனில் கலவரம் பாதித்த இடங்களை சென்று ஆய்வு செய்தார். நேற்று டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ். ரந்தாவா செய்தியாளர்களிடம் பேசிய போது டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.