இந்த எண் கொண்ட கார் டெல்லியில் ஓடினால் அபராதம் எச்சரிக்கை!
டெல்லியில் பல இடங்களில் சுவாசிக்க முடியத அளவிற்கு மாசு அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்னும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்த மாசு அளவை கட்டுப்படுத்த டெல்லியில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கிழமைகளில் ஒற்றை இலக்கத்தில் எண் கொண்ட வாகனங்களும், குறிப்பிட்ட கிழமைகளில் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்களும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்த படுகின்றன.
இதில் பெண்கள், மாற்று திறனாளிகள், உயர் பதவி வகிப்பவர்களுக்கு இந்த வாகன கட்டுப்பாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இந்த வாகன கட்டுப்பாட்டிற்கு விலக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன கட்டுப்பாடை மீறினால், ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.