மோடி குறித்த ஆவணப்படம்.. மாணவர் சஸ்பெண்ட்.! காங்கிரஸ் எம்பி கடும் கண்டனம்.!
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட்டதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது ஏற்பட்ட கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் தயார் செய்து வெளியிட்டது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.
பல்கலைக்கழக்தில் ஆவணப்படம் :
இந்த தடையை மீறி பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகத்திலும் கடந்த ஜனவரி 27ஆம் தேதி சில மாணவர்கள் திரையிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக திரையிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கையை டெல்லி பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
2 ஆண்டுகள் சஸ்பெண்ட் :
இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், டெல்லி பல்கலைக்கழத்தில் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட்டதற்காக பிஎச்டி பயிலும் மாணவர் ஒருவர் 2ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
சசிதரூர் கண்டனம் :
இடைநீக்கம் செய்யப்பட்ட லோகேஷ் சுக் எனும் மாணவர் காங்கிரஸ் இளைஞர் அணி பொறுப்பில் இருக்கிறார். அவரது இடைநீக்கம் என்பது டெல்லி பல்கலைக்கழகம் செய்யும் துரோகம் என்றும், இது ஒரு அவமான செயல் என்றும் தனது கண்டனத்தை காங்கிரஸ் எம்பி சசிதரூர் பதிவிட்டுள்ளார்.
மாணவர்கள் மீதான நடவடிக்கை :
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிட்டதாக கூறி, 8 மாணவர்கள் மீது பல்கலைக்கழக விசாரணை குழு குற்றம் சுமத்தி லோகேஷ் சுக் இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரவீந்தர் எனும் மாணவர் ஓராண்டு சஸ்பெண்ட்டும், மற்ற மாணவர்க்ள மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
As a @Delhiuniversit alum committed to academic freedom & independence of thought, I am appalled by this shocking decision. To suspend a student for two years for watching a documentary in a democracy is a disgrace & a betrayal of everything a university should stand for. Shame! pic.twitter.com/cpwVLr9OQb
— Shashi Tharoor (@ShashiTharoor) March 21, 2023