அனைவருக்கும் ஒரே பாஸ்வேர்ட்.! மாணவ மாணவியரின் சுய விவரங்கள் வெளிப்படும் அபாயம்.!?

Default Image

டெல்லி பல்கலைகழகத்தில் பயிலும் ஒரு மாணவரின் பதிவு எண்ணை வைத்து கொண்டு கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களின் முக்கிய விவரங்களையும் பலர் தெரிந்துகொள்ள முடியும் என சமூக வலைதளவாசி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி யுனிவர்சிட்டியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய ஓர் இணையதள பக்கத்தை பல்கலைக்கழகம் கொடுத்து உள்ளது. அந்த முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பெயர் மற்றும் பொதுவான கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

இதனை ட்விட்டரில் ஒரு மாணவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, அந்த பொது கடவுசொல்லானது அனைவருக்கும் ஒன்றானது. எனவே, ஒரு மாணவரின் பதிவு எண்ணை வைத்து கொண்டு கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களின் முக்கிய விவரங்களையும் பெரும்பாலானவர்கள் தெரிந்துகொள்ள முடியும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் மூலம் மாணவர்கள் பயிலும் கல்லூரி, மாணவர்களின் படிப்பு, அவர் ஆணா பெண்ணா, தேர்வு பதிவெண், பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி , முகவரி, இ-மெயில் ஐடி, தொடர்பு எண் ஆகிய அனைத்தும் வெளிப்படையாக தெரிகிறது. எனவே இது மாணவர்களின் சுய விவரங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பொது கடவுச்சொல் முறையானது, மாணவிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடும் எனவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்