ஆறு மணி நேரத்தில் டெல்லி டூ காஷ்மீர்.. 2023-க்குள் எக்ஸ்பிரஸ் சாலை..!
கத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்கான பணி கத்ராவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்பிரஸ் சாலை வருகின்ற 2023- க்குள் தயாராக இருக்கும் என் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் கருத்துப்படி, இந்த எக்ஸ்பிரஸ் சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், மக்கள் ரயில் அல்லது விமானம் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்கு பதிலாக சாலை வழியாக டெல்லிக்கு செல்ல விரும்புவார்கள். இந்த சாலை தனிச்சிறப்பு என்னவென்றால், இது புனித நகரங்களான கத்ரா மற்றும் அமிர்தசரஸை இணைக்கும்.
அதே நேரத்தில் இரு இடங்களுக்கிடையில் வேறு சில முக்கிய மத ஆலயங்களுக்கான இணைப்பைபும் இருக்கும் என்று அவர் கூறினார். நிலம் கையகப்படுத்தும் செயல்முறை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், நிலத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு ரூ .35,000 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் சாலை ஜம்மு மற்றும் கத்துவா உள்ளிட்ட முக்கியமான நகரங்கள் மற்றும் பஞ்சாபில் உள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், கபுர்தலா மற்றும் லூதியானா ஆகிய நகரங்களை கடந்து செல்லும். இது ஜம்மு, கத்துவா இடையேயான பயணிகளுக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என கூறினார்.
அதே நேரத்தில் பதன்கோட் மற்றும் ஜம்மு இடையிலான 4 வழிப் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிப் பாதையாகமாற்றும் பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.