டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் ‘மிக மோசமாக’ உள்ளது.!
டெல்லி வெப்ப உச்சநிலை உயர்ந்து மீண்டும் காற்றின் தரம் ‘மிகவும் மோசமாக’ உள்ளது.
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று வெப்பநிலை குறைந்தபட்சம் 10° செல்சியஸாகக் குறைந்து அதிகபட்சமாக 25° செல்சியஸாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, இன்று காலை காற்றின் தரக் குறியீடு (AQI) பட்பர்கஞ்ச் பகுதியில் 400 (மிகவும் மோசமாக) பதிவு செய்யப்பட்டுள்ளது.