ஐயா என் யானையை காணோம்! கண்டுபிடிச்சி தாங்க! உச்சநீதிமன்றத்தை அதிரவைத்த வழக்கு!

- டெல்லியில் வனவிலங்குக்களை வளர்க்க அனுமதி இல்லை என்பதால் சதாம் என்பவர் தன் யானையுடன் தப்பி சென்றார்.
- அவரையும், யானையும் கடந்த செப்டம்பர் மாதம் பிடித்து, யானையை முகாமிலும், சதாமை சிறையிலும் அடைத்தனர்.
தலைநகர் டெல்லியில் வனவிலங்குகளை வீட்டில் வளர்க்க அனுமதி இல்லை. அப்பகுதியில் வனவிலங்குகளை வளர்க்க ஏற்ற சூழ்நிலை டெல்லியில் இல்லை என்பதால் 2016ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள வனவிலங்குகள் உரிமையாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு வந்தன. இதனை தெரிந்த டெல்லி, ஷகர்போர் பகுதியை சேர்ந்த சதாம் எனப்வர் தான் வளர்ந்துவந்த லட்சுமி என்கிற யானையை கூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனை அறிந்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து சதாம் மற்றும் லட்சுமி யானையை தேடிவந்தனர்.
இந்த தேடுதல் வேட்டையில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் யமுனை நதிக்கரையில் சதாம் மற்றும் அவரது யானையை மீட்டனர். லட்சுமி யானையை ஹரியானா மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்திலும், சதாமை சிறையிலும் அடைத்தனர். சதாம் 68 நாள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு விடுதலை ஆனார்.
அதன் பின்னர் யானையை பிரிந்து இருக்கமுடியாத சதாம், தன் யானையை மீட்டுத்தர கோரி, டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை அளித்து அதிரவைத்துள்ளார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, ‘ இந்திய குடியாமைகளை கண்டுபிடிக்கவே ஆட்கொணர்வு மனு, யானையை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு அளிக்கக்கூடாது.’ என கூறி சதாம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025