போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி! பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 வழக்குகள்!
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
- டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதியபட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கல்லூரி வளாகத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஹைதிராபாத் மௌலானா அசாத் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் போராட்டம் விடிய விடிய நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ராத்திரியில் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு பின்னர் அதிகாலை விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தற்போது போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது 2 வழக்குகள் பதியபட்டுள்ளன.