டெல்லி ஷாஹின் பாக்கில் 144 தடை போலீசார் குவிப்பு..!

Default Image

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.

இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.இந்த வன்முறை தொடர்பாக 167 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஷாஹின் பாக் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

இதுகுறித்து இணை கமிஷனர் தேவேஷ் சந்திர வஸ்தவா கூறுகையில் ,சட்ட ஒழுங்கை பராமரிப்பது மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதே எங்கள் நோக்கம் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்