“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

Delhi Chalo Protest

கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி தற்போது வரை பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய சங்க அழைப்பு விட்டனர்.

நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டருடன் டெல்லியைநோக்கி புறப்பட்டனர். இதைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லை முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் டெல்லியில் நோக்கி உள்ளே நுழையாமல் இருக்க சிமெண்ட் தடுப்புகள், இரும்பு வேலிகள் மற்றும் ஆணிகளை சாலையில் பதித்து தடுத்து வருகின்றனர்.

தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

இதையும் மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகளை டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்,  தண்ணீர் பீச்சி அடித்து  விரட்டி அடித்தனர். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிலவும் மோதல் நிலவி வரும் நிலையில், சண்டிகரில் விவசாயத் தலைவர்களுடன் 3 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் மாலை 5 மணிக்கு  விவசாயத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே பிப்ரவரி 8 மற்றும் 12 தேதிகளில் நடந்த பேச்சு வார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுடன்  இடையிலான  மூன்றாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்