#Delhi reports: குறையும் கொரோனா..இன்று 805 பேருக்கு கொரோனா..17 பேர் உயிரிழப்பு.!
டெல்லியில் இன்று சற்று பாதிப்பு குறைந்துள்ளது ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா, 15 பேர் உயிரிழப்பு.
டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,38,482 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 937 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,24,254 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,207 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.