டெல்லியில் 24 மணி நேரத்தில் 12,000 பேருக்கு கொரோனா;319 பேர் உயிரிழப்பு
கொரோனாவின் சுனாமி தாக்குதலில் சிக்கித்தவிக்கும் டெல்லி மக்கள் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்டோர் பலி.
இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் கொரோனா அதன் தாக்கத்தை சற்று கூட குறைக்காமல் கோர தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இதனால் பல்வேறு மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12,651 ஆக பதிவாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 319 ஆக பதிவாகியுள்ளது, மேலும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றிருந்த 13,306 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரையிலான தொற்று பாதிப்பு 13,36,218 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 19,663 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 12,31,297 எனவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 85,258 பேர் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Delhi reports 12,651 new #COVID19 cases, 319 deaths and 13,306 recoveries in the last 24 hours
Total cases: 13,36,218
Death toll: 19,663
Total recoveries: 12,31,297
Active cases: 85, 258 pic.twitter.com/LnupsXucnT— ANI (@ANI) May 10, 2021