400 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு….50 க்கும் கீழ் குறைந்த உயிரிழப்பு..!
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 337 பேராக பதிவாகியுள்ளனர்.
டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டியது. மேலும் கொரோனா தொற்று பரவலை ஊரடங்கை அமல்படுத்தி பாதிப்பை குறைத்து டெல்லி கெஜ்ரிவால் அரசு வெற்றியைக் கண்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 337 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 36 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளதாக டெல்லி சுகதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்த டெல்லியில் ஒட்டுமொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 1,430,128 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,704 ஆக அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் டெல்லியில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.46% ஆக குறைந்துள்ளது. இதையடுத்து தினசரி பாசிட்டிவ் தொடர்ந்து குறைந்து வருகின்றது, தற்போது 4,511 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இது செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட 4,962 இலிருந்து 451 புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைவு என அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 752 பேருக்கு கொரோனா சிகிச்சை முடிந்த நிலையில் இதுவரை 1,400,913 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.