டெல்லியில் குறைந்தது கொரோனா பாதிப்பு;புதியதாக 1,550 பேர் பாதிப்பு ,207 உயிரிழப்பு
மார்ச் மாதத்திற்கு பிறகு டெல்லியில் குறைந்தது பெருந்தொற்று எண்ணிக்கை – டெல்லி சுகாதாரத்துறை அறிவிப்பு.
இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா காட்டுத்தீ போல் பரவிவந்தது, இந்நிலையில் அங்கு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து பேரதிரிச்சியை ஏற்படுத்தியது.
இதனை சரிசெய்ய மாநில அரசு பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது, மேலும் முழு ஊரடகை டெல்லி அரசு அமல்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளது.
இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோன பாதிப்பு பதிவாகியுள்ளது, அங்கு கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 1,550 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 207 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலான கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,18,418 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 4,375 பேர் குணமடைந்தநிலையில், இதுவரை 13,70,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 24,578 பேர் தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.