பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய IT நிறுவனமான சுபெக்ஸின் புதிய அறிக்கையின்படி, கடந்த 2020ஆண்டு இந்தியாவின் இணைய சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்துள்ளன, எனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு நகரங்களில் வாஷிங்டன் டி.சி, லண்டன், நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் உள்ளன. மேலும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்திகளில் ஹேக்கர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் நெட்வொர்க் சேவை இயக்குநர் கிரண் சக்கரியா இதைப்பற்றி கூறுகையில்,”இந்திய உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்கள் 91% அதிகரித்துள்ளது, ஹேக்கர்கள் இந்திய தொழில் நிறுவனங்களின் IP டேட்டா தகவல்களை சீர்குலைத்தலை குறிக்கோளாகக் கொண்டிருகின்றனர்.இதன்மூலம் இந்தியாவில் தடுப்பூசிகளின் உற்பத்தி திறன்கள் மற்றும் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய உற்பத்தி ஆலைகள் பற்றி அறிய ஹேக்கர்கள் ஆர்வம் காட்டுவது உறுதியாகியுள்ளது ,இது நாட்டின் உற்பத்தித் துறையை கண்காணித்து, பின் தாக்குதல் நடத்துவதற்கு செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது,எனவே இந்தியாவில் டிஜிட்டல் நெட்வொர்க்கின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…