#BREAKING: கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு..!
டெல்லி காவல்துறை காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்திவரும் கிரிப்டோ தன்பெர்க் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் மியா கலீஃபா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திகொண்டிருக்கும் போராட்டம் தொடர்பாக ட்வீட் செய்ததற்காக டெல்லி காவல்துறை காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் “போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” என நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.