ஒலிம்பிக்கில் இருமுறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட 5 வீரர்களுடன் மூத்த வீரரான சுசில்குமார் உள்ளிட்ட சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் படுகாயங்களுடன் சோனு மகால், ஆமித் ஆகிய இரு வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த வாகனங்களை சோதனை செய்ததில் ஏராளமான தடிகள் மற்றும் துப்பாக்கி ஆகியவை கிடைத்துள்ளது. இதனை அடுத்து மூத்த வீரர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் குமாரும் ஒருவர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாகியுள்ள சுசில்குமார் வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதால் சுஷில் குமாருக்கு டெல்லி காவல் நிலையத்தில் இருந்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்த பொழுது உயிரிழந்த இளம் வீரர் தங்கியிருந்தது ஒரு மூத்த மல்யுத்த வீரர் வீடு எனவும், இந்த வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட மோதல்தான் தற்பொழுது கொலையில் முடிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…