தனிமைப்படுத்துதலில் இருந்தவரின் பெற்றோரை தகனம் செய்ய உதவிய டெல்லி காவல்துறை!
வீட்டிலேயே தனிமைப்படுத்துதலில் இருந்த நபர் ஒருவரின் பெற்றோர் உயிரிழந்த நிலையில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் அவரது பெற்றோரின் உடலை தகனம் செய்ய உதவியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தான் தற்பொழுது வைக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவின் தீவிரம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள புராரி எனும் பகுதியில் உள்ள நபர் ஒருவரின் மனைவி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
எனவே அந்த நபர் மற்றும் அவரது பெற்றோர் ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்து பார்க்கும் பொழுது தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல அந்த நபரின் பெற்றோர்கள் கொரோனாவிற்கான அறிகுறிகளை கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அவரது பெற்றோர்கள் உயிரிழந்தும் உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்ததால் வெளியில் சொல்ல முடியாத அந்த மனிதன் சமூக வலைதளம் மூலம் உதவியை நாடியுள்ளான், ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் அந்த நபரது பெற்றோரை தகனம் செய்வதற்காக அவருக்கு உதவியுள்ளனர்.