பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு.! 5 நாடுகளிடம் இருந்து சிசிடிவி விடீயோக்களை கோரியுள்ள டெல்லி காவல்துறை.!

BJP MP Brij Bhushan Sharan Singh

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக 5 நாடுகளில் இருந்து சிசிடிவி காட்சிளை டெல்லி காவல்துறை கோரியுள்ளது. 

மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதன் பிறகு மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்க்கனவே, மல்யுத்த வீராங்கனைகளின் புகாரை பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த விசாரணை தொடர்பாக, போட்டிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தகவல்களை கேட்டு ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்