டெல்லியில் ஆக்ஸிஜனை கள்ள சந்தையில் விற்ற கேட் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கைது
சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் – போலீஸ் அதிரடி நடவடிக்கை
புதுடெல்லியில் கேட் ஆம்புலன்ஸ் மூலம் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பனை செய்த 2 பேரை தென் டெல்லி போலீசார் திங்கள்கிழமை (மே 10) இன்று கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் வந்தது, அதன்பிறகு காவல்துறையினர் விசாரித்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரான பவன் மற்றும் அவரது கூட்டாளர் இருவரும் அவர்கள் பணிபுரிந்த கேட் ஆம்புலன்சில் இருந்து ஆக்ஸிஜனை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பவனை விசாரித்தபோது அவர் காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார், ஆனால் அவரது தொலைபேசியிலிருந்து தகவல்களை மீட்டெடுத்த காவல்துறையினரின் கடுமையான விசாரணையில் பவன் கள்ள சந்தையில் 15 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும், 50 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு 90 ஆயிரம் ரூபாயும் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சமூக வளைதளத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படுவோரை தன்னை அனுகும் படி செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார். மேலும் பேடிஎம் வழியாக அவர்கள் ஆக்ஸிஜன் தேவைப்படுவோரிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர். மேலும் சோதனையின்போது 2 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 32 பிபிஇ கிட்கள் மற்றும் ரூ .1 லட்சம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்
இதனையடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பிளாக் மார்க்கெட்டிங்கில் தொடர்புடைய கேட் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விபின் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.