டெல்லியில் இன்று ஒரே நாளில் 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Default Image

அச்சத்தில் டெல்லி மக்கள்,புதிய உச்சத்தை தொட்டுள்ள புதிய பாதிப்பு எண்ணிக்கை… 

இந்தியாவில் கொரேனா 2 வது அலை காட்டுத்தீ போல் மக்களிடையே பரவி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,832 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு 341 பேர் எனவும் டெல்லி அரசு தெறிவித்துள்ளது.

மேலும் 79,593 கொரோனா பரிசோதனை எடுத்துள்ளதாகவும் அதில் 65,663 ஆர்,டி-பிசிஆர்/சிபிஎன்ஏஏடி/என்ஏடி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது, இச்சூழலில் இறப்பு விகிதம் 24.92 ஆக பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையிலான கொரோனா பாதிப்பு 12,92,867 ஆகவும், அதில் 91,035 பேர் சிகிச்சையில் உள்ளனர், மேலும் 18,739 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனா சிகிச்சை முடிந்து 19,085 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11,83,093 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,14,657 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர், இதுவரையிலான தடுப்பூசி போட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,66,694 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50.425 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்