டெல்லிக்கு 5,000 கோடி தேவை ! பேரிடர் நிவாரண நிதி இன்னும் வரவில்லை – மனீஷ் சிசோடியா
டெல்லி அரசானது தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவும் அதை சமாளிக்க 5000 கோடி தேவை என்று அம்மாநில துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அதில் அவர் பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியை டெல்லி அரசு பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .
மேலும் அவர் கூறுகையில் எங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் அலுவலக தேவைகளுக்கு 3,500 கோடி தேவைப்படுகிறது.கடந்த இரண்டு மாதங்களில் ஜிஎஸ்டி மூலம் தலா 500 கோடி கிடைத்துள்ளது .மாநிலத்தின் பல்வேறு வருமானங்களின் மூலம் 1,736 கோடி கிடைத்திருக்கிறது என்றார் . 2 மாதங்களுக்கு 7000 கோடி தேவை இதுகுறித்து நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் எங்கள் ஊழியர்கள் ,மருத்துவர்கள் ,ஆசிரியர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது என்று கூறினார்.