டெல்லி மாநகராட்சிக்கு எதிராக வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் !
டெல்லி மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் விதிமீறிக் கட்டப்பட்ட வணிக நிறுவனங்களும் தங்கள் கட்டடத்தை வணிகப் பயன்பாட்டுக்கானதாக மாற்றக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. அதற்காகக் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தி வகைமாற்றம் செய்துகொள்ளாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து டெல்லி வணிகர்கள் 48 மணிநேரக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முக்கியமான சந்தைகள், கடைத்தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.